/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடல்நீரை குடிநீராக்கும் ஆலை தொழிலாளர்கள் போராட்டம்
/
கடல்நீரை குடிநீராக்கும் ஆலை தொழிலாளர்கள் போராட்டம்
கடல்நீரை குடிநீராக்கும் ஆலை தொழிலாளர்கள் போராட்டம்
கடல்நீரை குடிநீராக்கும் ஆலை தொழிலாளர்கள் போராட்டம்
ADDED : ஏப் 08, 2025 06:37 PM
மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில், தினமும், 10 கோடி லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை உள்ளது.
இங்கு, பணிபுரியும், 40 தொழிலாளர்களுக்கு கடந்த, ஐந்து மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை எனக்கூறி அவர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:
கடல்நீரை குடிநீராக்கும் ஆலையை ஒப்பந்த அடிப்படையில் பராமரித்து வந்த தனியார் நிறுவனம் விடுவிக்கப்பட்டு, கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் சென்னை குடிநீர் வாரியத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.
அதிலிருந்து, இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளமும் வழங்கப்படவில்லை. தனியார் நிறுவன அதிகாரிகளிடம் கேட்கும் போது, சம்பளத்தை சென்னை குடிநீர் வாரியம் அளிக்கும் என்றனர்.
சென்னை குடிநீர் வாரியத்திடம் கேட்டால், தனியார் நிறுவனம் வழங்கும் என்கின்றனர். இரு தரப்பினரும் மாறிமாறி சம்பளம் வழங்காமல் அலைகழிக்கின்றனர்.
தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய, ஐந்து மாத சம்பள பணத்தை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

