/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் ஐந்து கிராமத்தில் பாதுகாப்பு ஒத்திகை
/
கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் ஐந்து கிராமத்தில் பாதுகாப்பு ஒத்திகை
கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் ஐந்து கிராமத்தில் பாதுகாப்பு ஒத்திகை
கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் ஐந்து கிராமத்தில் பாதுகாப்பு ஒத்திகை
ADDED : மே 17, 2025 02:30 AM

திருவள்ளூர்:பூண்டி நீர்த்தேக்கத்தில் உபரிநீர் திறக்கும் போது, கொசஸ்தலை ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை எதிர்கொள்வது குறித்த பாதுகாப்பு ஒத்திகை, ஐந்து கிராமங்களில் இன்றுநடந்தது.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம், சென்னை நகர குடிநீர் தேவைக்காக கொசஸ்தலை ஆற்றின் நடுவில் கடடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மழைக் காலத்திலும், நீர்த்தேக்கத்தில் அதிகளவில் தண்ணீர் வந்தால், உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படும்.
அப்போது ஏற்படும் வெள்ளப்பெருக்கால், ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை, நேற்று மாலை வெள்ளிவாயல், ராமதண்டலம், மோவூர், குருவாயல் மற்றும் சேத்துப்பாக்கம் ஆகிய ஐந்து இடங்களில் நடந்தது.
தீயணைப்பு, பேரிடர் மீட்புக் குழுவினர் வெள்ளத்தில் சிக்குவோரை மீட்டு, பாதுகாப்பான இடத்தில் சேர்ப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். மேலும், வருவாய், நீர்வளம், காவல் உள்ளிட்ட அனைத்து துறையினரும் இதில் பங்கேற்றனர்.
மேலும், ஒலிபெருக்கி வாயிலாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை குறித்து விளக்கம்அளிக்கப்பட்டது.
அதேபோல், மீஞ்சூர் அடுத்த வெள்ளிவாயல்சாவடியில், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு காலங்களில் கரையோர கிராமங்களில் வசிப்பவர்களை மீட்பது தொடர்பான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சிநடந்தது.