ADDED : பிப் 18, 2025 09:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை -- சத்தியவேடு சாலையில், பொம்மாஜிகுளம் கிராமத்தில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில் போலீசார் நேற்று வாகன தணிக்கை செய்தனர்.
அப்போது, ஆந்திர மாநிலம், சத்தியவேடு பகுதியில் இருந்து, மணல் கடத்தி வந்த இரு லாரிகளை பறிமுதல் செய்தனர். அதன் ஓட்டுனர்களான, ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியைச் சேர்ந்த குமரேசன், 35, திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன், 34, ஆகியோரை கைது செய்தனர்.
பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.