ADDED : அக் 03, 2024 08:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டையில், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று சோதனை மேற்கொண்ட போலீசார், நல்லதண்ணீர் குளம் தெருவில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில், 201 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். கடையின் உரிமையாளர் முத்து, 48, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.