/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேசிய மல்லர் கம்பம் 24 தமிழக வீரர்கள் தேர்வு
/
தேசிய மல்லர் கம்பம் 24 தமிழக வீரர்கள் தேர்வு
ADDED : நவ 05, 2024 06:57 AM

சென்னை : சத்தீஷ்கர் மல்லர் கம்பம் சங்கம் சார்பில், 34வது தேசிய அளவிலான சீனியர் மல்லர் கம்பம் சாம்பியன்ஷிப் போட்டி, சத்தீஷ்கர் மாநிலம், பிலாஸ்பூர் பகுதியில் வரும் 14ல் துவங்குகிறது. இதில், தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு மாநில அணிகள் பங்கேற்க உள்ளன.
போட்டியில் பங்கேற்கும் தமிழக அணியின் வீரர், வீராங்கனையர் தேர்வு, சென்னை, ஐ.சி.எப்., மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்தது. தேர்வில், சென்னை உட்பட பல்வேறு மாவட்ட வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர்.
இதில், சீனியர் பிரிவில் இருபாலரிலும் தலா ஆறு வீரர், வீராங்கனையரும், ஜூனியர் பிரிவுக்கு, தலா ஆறு வீரர், வீராங்கனையரும் தேர்வாகியுள்ளனர். தேர்வாகிய, 24 பேரும் தமிழக அணியாக களமிறங்கியுள்ளனர்.