/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இடிந்து விழும் நிலையில் சுயஉதவி குழு கட்டடம்
/
இடிந்து விழும் நிலையில் சுயஉதவி குழு கட்டடம்
ADDED : மார் 27, 2025 01:55 AM

ஆர்.கே.பேட்டை,:ஆர்.கே.பேட்டை அடுத்த பெரிய நாகபூண்டி ஏரிக்கரை வழியாக ஆந்திர மாநிலம், கங்கம்மாபுரத்திற்கு தார்ச்சாலை வசதி உள்ளது. இந்த வழியாக ஏராளமானோர், ஆந்திர மாநிலம் திருநாதராஜபுரத்திற்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், பெரிய நாகபூண்டி ஏரிக்கரையை அடுத்து, கங்கம்மாபுரம் மற்றும் அம்மன் கோவில் கூட்டு சாலையில், மகளிர் சுயஉதவி குழு கட்டடம், அங்கன்வாடி மையம், ஊராட்சி நுாலகம் உள்ளிட்டவை அடுத்தடுத்து அமைந்துள்ளன.
இதில், மகளிர் சுயஉதவி குழு கட்டடம் பராமரிப்பு இன்றி சீரழிந்து கிடக்கிறது. இந்த கட்டடத்தின் கான்கிரீட் தளம் பெயர்ந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், இந்த வழியாக செல்வோர், விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர்.
எனவே, அப்பகுதிவாசிகளின் பாதுகாப்பு கருதி, மகளிர் சுயஉதவி குழு கட்டடத்தை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.