ADDED : ஜன 05, 2025 10:50 PM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், குப்பம்கண்டிகை ஊராட்சியில், 50க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக்கள் செயல்படுகின்றன. இவர்கள் கூட்டம் நடத்தவும், கணக்கு புத்தகங்களை பாதுகாப்பாக வைக்கவும், பணிகளை செய்ய கட்டட வசதி ஏற்படுத்த வேண்டும் என, திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து , 2018 -- 19ம் ஆண்டு, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதியில், 70.70 லட்சம் ரூபாய் செலவில், மகளிர் சுயஉதவிக் குழு கட்டடம் கட்ட தீர்மாணிக்கப்பட்டது.
பின், டெண்டர் விடப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன், கட்டடப் பணி துவங்கியது. கடந்த வாரம் கட்டடப் பணி முடிந்த நிலையில் நேற்று, திருவாலங்காடு ஒன்றிய சேர்மன் ஜீவா, மகளிர் சுயஉதவிக் குழு கட்டடத்தை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு ஒன்றிய சேர்மன் ஜீவா, 'தினமலர்' நாளிதழ் காலண்டர் வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் குப்பம்கண்டிகை ஊராட்சி தலைவர் தணிகாசலம் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

