/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
செங்குன்றம் - திருவள்ளூர் நெடுஞ்சாலை ரூ.35 கோடியில் மேம்படுத்த திட்டம்

ADDED : பிப் 13, 2024 06:30 AM
சென்னை: செங்குன்றம் - திருவள்ளூர் இடையிலான சாலையை, 35 கோடி ரூபாயில் மேம்படுத்த, நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டு உள்ளது.
மாதவரம், பொன்னேரி, சோழவரம், செங்குன்றம், புழல், பம்மதுகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்களுக்கு செல்வதற்கு, செங்குன்றம் - திருவள்ளூர் நெடுஞ்சாலையை பயன்படுத்துகின்றனர்.
இச்சாலை, 37 கி.மீ., நீளம் கொண்டது. ஆந்திராவில் இருந்து வரும் சரக்கு வாகனங்களும், திருத்தணி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் கார் உள்ளிட்ட பயணியர் வாகனங்களும், இச்சாலையில் அதிக அளவில் பயணித்து வருகின்றன. இதன் காரணமாக, சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது.
எனவே, இந்த சாலையை மேம்படுத்தி மழைநீர் கால்வாய், மையத் தடுப்பு உள்ளிட்டவை அமைக்க, நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது.
இதுமட்டுமின்றி ஆங்காங்கே உள்ள அபாயகரமான சாலைகள், சந்திப்புகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில், விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது.இதனால், பணிகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.