/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொதட்டூரில் குடியிருப்புகளுக்கு இடையே பாயும் கழிவுநீர்
/
பொதட்டூரில் குடியிருப்புகளுக்கு இடையே பாயும் கழிவுநீர்
பொதட்டூரில் குடியிருப்புகளுக்கு இடையே பாயும் கழிவுநீர்
பொதட்டூரில் குடியிருப்புகளுக்கு இடையே பாயும் கழிவுநீர்
ADDED : டிச 08, 2024 02:48 AM

பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டையில், 30,000 பேர் வசித்து வருகின்றனர். நகரின் மேற்கில் ஆறுமுகசுவாமி மலை அமைந்துள்ளது. மலையில் இருந்து பாயும் மழைநீர், இ.எஸ்.டி.நகர் வழியாக கால்வாய்க்கு செல்கிறது.
இந்த கால்வாயில், மழைநீர் பாய்வதை காட்டிலும், கழிவுநீரே அதிகளவில் பாய்கிறது. ஆங்காங்கே தேங்கியும் உள்ளது. இதில், செடி, கொடிள் வளர்ந்துள்ளதால், கொசு தொல்லை மற்றும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
மேலும், இந்த கழிவுநீரின் நிறம், பச்சை, சிவப்பு, ஊதா என பல்வேறு விதமாக மாறி வருகிறது. இதனால், இந்த கழிவுநீரில் ஏதேனும் ரசாயன கழிவு கலக்கிறதா என, சந்தேகமும் பகுதிவாசிகளிடையே எழுந்துள்ளது.
நகரின் வட மேற்கில் இருந்து வடகிழக்கு நோக்கி, 10 ஆடி அகலத்தில் பாயும் இந்த திறந்தநிலை கால்வாயால், பகுதிவாசிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த கால்வாயை சீரமைத்து சுத்தமாக பராமரிக்க வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.