/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருமழிசை காலி மனைகளில் மழைநீரில் கழிவுநீர் கலந்து தேங்கும் அவலம்
/
திருமழிசை காலி மனைகளில் மழைநீரில் கழிவுநீர் கலந்து தேங்கும் அவலம்
திருமழிசை காலி மனைகளில் மழைநீரில் கழிவுநீர் கலந்து தேங்கும் அவலம்
திருமழிசை காலி மனைகளில் மழைநீரில் கழிவுநீர் கலந்து தேங்கும் அவலம்
ADDED : டிச 10, 2024 01:00 AM

திருமழிசை, திருமழிசை பேரூராட்சிக்குட்பட்டது மடவிளாகம் பகுதி. தொழிற்பேட்டை அருகே அமைந்துள்ள இப்பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதியில் உள்ள காலி மனைகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.
இதனால் பகுதிவாசிகள் மற்றும் அருகில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் மலேரியா, டெங்கு, மர்ம காய்ச்சல் போன்ற நோய் தொற்று ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், மழைநீருடன் குப்பையும் சேகரமாகி, கழிவுநீராக மாறி, துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரிகள், காலி மனைகளில் மழைநீர் தேங்குவதை தடுக்கவும், காலி மனைதாரர்களுக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திருமழிசை பகுதிவாசிகள் மற்றும் தொழிற்சாலைக்கு வரும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.