/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பேருந்து நிலைய வளாகத்தில் குளம் போல் தேங்கிய கழிவுநீர்
/
பேருந்து நிலைய வளாகத்தில் குளம் போல் தேங்கிய கழிவுநீர்
பேருந்து நிலைய வளாகத்தில் குளம் போல் தேங்கிய கழிவுநீர்
பேருந்து நிலைய வளாகத்தில் குளம் போல் தேங்கிய கழிவுநீர்
ADDED : செப் 11, 2025 09:51 PM
திருமழிசை:திருமழிசை பேருந்து நிலைய வளாகத்தில் குளம்போல் கழிவுநீர் தேங்கியுள்ளதால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருமழிசை பேருந்து நிலையம் அருகே, நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு, திருமழிசை மற்றும் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட பகுதிமக்கள் மருத்துவ வசதிக்கு வந்து செல்கின்றனர்.
இந்த ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, திருமழிசை பேரூராட்சி கட்டுப்பாட்டில் கட்டண கழிப்பறை உள்ளது.
இந்த கழிப்பறையை முறையாக பராமரிக்காததால், இங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் பேருந்து நிலைய வளாகம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய நுழைவாயில் அருகே குளம்போல் தேங்கியுள்ளது.
இதனால், ஆரம்ப சுகாதார நிலையம் வரும் நோயாளிகள் மற்றும் பயணியருக்கு, தொற்று நோய் ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரிகள், திருமழிசை பேருந்து நிலைய வளாகத்தில் குளம்போல் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற வேண்டுமென, பயணியர் மற்றும் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.