/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கால்வாயில் தேங்கும் கழிவுநீர் தொற்று நோய் பரவும் அபாயம்
/
கால்வாயில் தேங்கும் கழிவுநீர் தொற்று நோய் பரவும் அபாயம்
கால்வாயில் தேங்கும் கழிவுநீர் தொற்று நோய் பரவும் அபாயம்
கால்வாயில் தேங்கும் கழிவுநீர் தொற்று நோய் பரவும் அபாயம்
ADDED : ஏப் 25, 2025 02:22 AM

திருத்தணி:திருத்தணி நகராட்சி, எம்.ஜி.ஆர்., நகரில், 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பல்வேறு தெருக்களில், தற்போது வரை கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கப்படவில்லை.
சில தெருக்களில் கால்வாய் வசதி ஏற்படுத்தியிருந்தாலும், அதை முறையாக பராமரிக்காததால், தற்போது கால்வாய்கள் தூர்ந்துள்ளன. மேலும், கழிவுநீர் கால்வாய்கள் சுத்தம் செய்து பல மாதங்கள் ஆகியுள்ளதால், கழிவுநீர் வெளியேற முடியாமல் குளம் போல் தேங்கியுள்ளது.
குறிப்பாக, பழைய மற்றும் புதிய வண்ணார் தெரு, அண்ணாநகர் தெரு உள்ளிட்ட இடங்களில் கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி, பகல் நேரத்திலேயே கடிக்கிறது. இதனால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், துர்நாற்றம் வீசி வருகிறது.
கழிவுநீர் கால்வாயில் தேங்கும் தண்ணீரை அகற்றி, கால்வாய்கள் சுத்தம் செய்ய வேண்டும். புதிய மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும், நகர்மன்ற கூட்டத்தில் புகார் தெரிவித்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, எம்.ஜி.ஆர்.நகரில் கால்வாய்கள் சுத்தம் செய்து, தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.