/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பட்டாபிராமபுரத்தில் கால்வாயில் தேங்கும் கழிவுநீர்
/
பட்டாபிராமபுரத்தில் கால்வாயில் தேங்கும் கழிவுநீர்
ADDED : அக் 13, 2024 01:24 AM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் பட்டாபிராமபுரம் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள திரவுபதியம்மன் கோவில் மற்றும் பள்ளிக்கூட தெருவில், வீடுகளில் வெளியேறும் கழிவுநீர் செல்வதற்காக பல லட்சம் ரூபாய் மதிப்பில், கடந்தாண்டு புதியதாக கால்வாய் அமைக்கப்பட்டது.
ஆனால், கழிவுநீர் வெளியே செல்வதற்கு வசதியில்லாமல் கால்வாய் கட்டப்பட்டதால், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் தெரு முனை பகுதியில், கழிவுநீர் வெளியே செல்ல முடியாததால் குளம் போல் தேங்கியுள்ளன. இதனால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி கடிப்பதுடன், துர்நாற்றம் வீசுகிறது.
மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளதால் பலமுறை அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், கிராம சபையில் மனுவாகவும் கொடுத்தனர். ஆனால், கழிவுநீர் வெளியேற்றாததால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வெளியேறுவதற்கு, வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்கின்றனர்.