/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடியில் குடியிருப்புகளை சூழ்ந்த கழிவுநீர்
/
கும்மிடியில் குடியிருப்புகளை சூழ்ந்த கழிவுநீர்
ADDED : ஜன 08, 2025 12:50 AM

கும்மிடிப்பூண்டி:தொழிற்சாலைகள் மற்றும் டேங்கர் லாரிகளின் கழிவுநீர் கலப்பால், கும்மிடிப்பூண்டி நகரின் முக்கிய நீர் ஆதாரமான தாமரை ஏரியும் அதன் உபரி நீர் கால்வாயிலும் தற்போது கழிவுநீர் தேங்கியுள்ளது.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பல குடியிருப்பு பகுதிகளுக்கு இடையே அந்த கால்வாய் செல்வதால், அப்பகுதிகள் முழுதும் கழிவுநீர் சூழ்ந்து காணப்படுகிறது.
குறிப்பாக, ரெட்டம்பேடு சாலையின் குறுக்கே, நீதிமன்றம் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகள் முழுதும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. துணை மின் நிலையத்தில் துவங்கி, காந்தி நகர், தபால் தெரு வழியாக செல்லும் உபரி நீர் கால்வாய் முழுதும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
கும்மிடிப்பூண்டி நகரை சுற்றி கழிவுநீர் தேங்கி நிற்பதால், கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி, சுகாதாரமற்ற சூழலில் நகர மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் குடியிருப்புவாசிகள் அனைவரும் துர்நாற்றத்திற்கு இடையே வசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கழிவுநீர் தேக்கத்திற்கு உரிய தீர்வு காண வேண்டும். சுகாதாரமான நகர் பகுதியை உருவாக்க வேண்டும் என, கும்மிடிப்பூண்டி பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.