/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பள்ளி வளாகத்தில் புகுந்த மழைநீருடன் கழிவுநீர்
/
அரசு பள்ளி வளாகத்தில் புகுந்த மழைநீருடன் கழிவுநீர்
அரசு பள்ளி வளாகத்தில் புகுந்த மழைநீருடன் கழிவுநீர்
அரசு பள்ளி வளாகத்தில் புகுந்த மழைநீருடன் கழிவுநீர்
ADDED : அக் 19, 2024 12:40 AM

ஊத்துக்கோட்டை:வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக சில தினங்களாக பலத்த மழை பெய்தது. ஆறு, ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டது. புயல் கரையை கடந்ததால், இரு தினங்களாக மழை நின்று வெயில் கொளுத்த துவங்கியது. ஊத்துக்கோட்டை, பென்னலுார்பேட்டை, பெரியபாளையம் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் நேற்று மதியம் திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்தது.
சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. முறையான பராமரிப்பு இல்லாததால், கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்லாமல் தேங்கியது. திருவள்ளூர் சாலையில் கழிவுநீர் கால்வாயில் இருந்து கழிவுநீர் மழைநீருடன் கழிவுநீர் சேர்ந்து சாலையில் ஓடியது. இதில் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் மழைநீருடன் கலந்து கழிவுநீர் பள்ளி வளாகத்தில் சென்றது.
அங்கு குளம் போல் தேங்கிய நீரில் துர்நாற்றம் வீசியது. ஆசிரியர்கள், மாணவிகள் தேங்கியுள்ள கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. பள்ளி வளாகத்தில் சேர்ந்துள்ள கழிவுநீரை அகற்றவில்லை. எனவே மாணவிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஊத்துக்கோட்டை அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள கழிவுநீருடன் கலந்து மழை நீரை அகற்ற வேண்டும் என ஆசிரியர்கள், மாணவியர், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

