/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கழிவுநீர் கால்வாய் சிலாப் சேதம் ஊத்துக்கோட்டை மக்கள் அச்சம்
/
கழிவுநீர் கால்வாய் சிலாப் சேதம் ஊத்துக்கோட்டை மக்கள் அச்சம்
கழிவுநீர் கால்வாய் சிலாப் சேதம் ஊத்துக்கோட்டை மக்கள் அச்சம்
கழிவுநீர் கால்வாய் சிலாப் சேதம் ஊத்துக்கோட்டை மக்கள் அச்சம்
ADDED : ஏப் 08, 2025 12:20 AM

ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை பேரூராட்சி மூனீஸ்வரன் கோவில் தெருவில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வளர்ந்து வரும் இப்பகுதியில் முனீஸ்வரன் கோவில், அங்காளம்மன், சப்தகன்னியர் கோவில் ஆகியவை உள்ளன.
செவ்வாய், வெள்ளி மற்றும் விசேஷ நாட்களில் அதிகளவு பக்தர்கள் கோவிலுக்கு சென்று வருவர். இப்பகுதியில் உள்ள கால்வாய் மேல் அமைக்கப்பட்ட சிலாப் சேதமடைந்து உள்ளது.
இவ்வழியே இருசக்கர வாகனங்களில் செல்வோர் அச்சத்துடன் செல்கின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் இப்பகுதியில் செல்வோர், பாதசாரிகள் சேதம் தெரியாமல் கால்வாயில் விழுந்து காயமடைகின்றனர்.
எனவே, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, முனீஸ்வரன் கோவில் தெருவில் கால்வாய் மேல் சேதமடைந்துள்ள, சிலாப்பை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.