/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விடியங்காடில் வரத்து கால்வாயில் இணையும் கழிவுநீர் கால்வாய்
/
விடியங்காடில் வரத்து கால்வாயில் இணையும் கழிவுநீர் கால்வாய்
விடியங்காடில் வரத்து கால்வாயில் இணையும் கழிவுநீர் கால்வாய்
விடியங்காடில் வரத்து கால்வாயில் இணையும் கழிவுநீர் கால்வாய்
ADDED : ஏப் 06, 2025 11:30 PM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம் விடியங்காடு கிராமத்தை ஒட்டி, ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்ட மலைத்தொடர் அமைந்துள்ளது.
இந்த மலைத்தொடரில் இருந்து, பல்வேறு ஓடைகள் உருவாகின்றன.
இதில் ஒன்று விடியங்காடு கிராமத்தின் நடுவே பாய்ந்து செல்கிறது. ஊருக்குள் பாயும் இந்த ஓடை, வரத்து கால்வாய் என அழைக்கப்படுகிறது. தெருவின் குறுக்கே பாயும் வரத்து கால்வாய்க்கு, சமீபத்தில் புதிதாக பாலம் கட்டப்பட்டது.
பாலம் கட்டப்பட்ட பகுதியில் கழிவுநீர் கால்வாயுடன் வரத்து கால்வாயுடன் இணைக்கப்பட்டுள்ளதால், கழிவுநீர் கால்வாயாக மாற்றப்பட்டுள்ளது. இதில், பிளாஸ்டிக் உள்ளிட்ட ஏராளமான கழிவு மிதக்கிறது.
அதே நேரம், இந்த கால்வாய்க்கு இணையாக கிராமத்தின் வடக்கில் மலையடிவாரத்தில் பாயும் ஓடை, தெளிவான நீரோடையாக இந்த கோடையிலும் வற்றாமல் பாய்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கழிவுநீர் கால்வாய் இணைக்கப்பட்டுள்ளதால், வரத்து கால்வாயில் குவிந்துள்ள குப்பை. இடம்: விடியங்காடு.