/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிவாடாவில் காஸ் கசிவால் தீப்பிடித்து எரிந்த குடிசை வீடு
/
சிவாடாவில் காஸ் கசிவால் தீப்பிடித்து எரிந்த குடிசை வீடு
சிவாடாவில் காஸ் கசிவால் தீப்பிடித்து எரிந்த குடிசை வீடு
சிவாடாவில் காஸ் கசிவால் தீப்பிடித்து எரிந்த குடிசை வீடு
ADDED : ஜன 17, 2025 10:13 PM

திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம் சிவாடா கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி, 45; கூலி தொழிலாளி. இவர், குடும்பத்துடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவரது மனைவி அமுதா, 41, நேற்று மதியம் காஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார்.
அப்போது, காஸ் சிலிண்டரின் 'ரெகுலேட்டர்' குழாயில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து, அமுதா வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்பகுதியினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், திருத்தணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சாம்பாலனது. கனகம்மாசத்திரம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விசாரிக்கின்றனர்.