/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நள்ளிரவில் தீ விபத்து கடை எரிந்து நாசம்
/
நள்ளிரவில் தீ விபத்து கடை எரிந்து நாசம்
ADDED : மார் 18, 2025 09:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையம் அருகே, அதே கிராமத்தைச் சேர்ந்த வசந்தி என்பவர் டீ கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, அவரது டீ கடை திடீரென தீப்பற்றி எரிந்தது.
உடனடியாக, பள்ளிப்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும், கடையில் இருந்த 'டிவி, பிரிஜ்' மற்றும் பல்வேறு பொருட்கள் நாசமாகின. பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.