/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போதை பொருள் விற்றால் கடை உரிமம் ரத்து
/
போதை பொருள் விற்றால் கடை உரிமம் ரத்து
ADDED : டிச 05, 2024 11:28 PM
திருவள்ளூர், 'தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பனை செய்யும் கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்' என, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் சட்டம் - ஒழுங்கு மற்றும் போதை பொருள் தடுப்பு கூட்டம் நேற்று நடந்தது. திருவள்ளூர் எஸ்.பி., சீனிவாசபெருமாள், ஆவடி மாநகர காவல் துணை ஆணையர்கள் ஐமன் ஜமால், அன்பு முன்னிலை வகித்தனர்.
கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:
மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லுாரிகளில் போதை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கல்வி நிலையம் அருகில் உள்ள கடைகளில், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்தால், உடனடியாக அபராதம் விதித்து, கடையினை அப்புறப்படுத்த வேண்டும்.
கடைகளில் உணவு பாதுகாப்பு, காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கூட்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். போதை பொருள் விற்பனை செய்து கண்டறியப்பட்டால், கடையின் உரிமம் ரத்து செய்ய வேண்டும். அவற்றின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் கற்பகம் உட்பட பலர் பங்கேற்றனர்.