/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அருமந்தையில் கடையின் பூட்டை உடைத்து திருட்டு
/
அருமந்தையில் கடையின் பூட்டை உடைத்து திருட்டு
ADDED : ஜன 15, 2025 11:40 PM
சோழவரம், சோழவரம் அடுத்த, அருமந்தை கூட்டுச்சாலை அருகே, மளிகை கடை நடத்தி வருபவர் ராமகிருஷ்ணன், 52; இவர், கடந்த 13ம் தேதி இரவு, வியாபாரம் முடித்து கடையை பூட்டிவிட்டு, வீட்டிற்கு சென்றார்.
நேற்று முன்தினம் காலை, கடையை திறக்க வந்தபோது, கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டார். உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த, 5,000 ரூபாய் பணம், 10,000 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் ஆகியவை திருடு போயிருப்பது தெரிந்தது.
இது குறித்து தகவல் அறிந்த சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.