/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வடாரண்யேஸ்வரர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்த கடைகள் அதிரடி அகற்றம்
/
வடாரண்யேஸ்வரர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்த கடைகள் அதிரடி அகற்றம்
வடாரண்யேஸ்வரர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்த கடைகள் அதிரடி அகற்றம்
வடாரண்யேஸ்வரர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்த கடைகள் அதிரடி அகற்றம்
ADDED : ஏப் 06, 2025 02:28 AM

திருவாலங்காடு:திருத்தணி முருகன் கோவிலின் உபக்கோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவிலில், பங்குனி உத்திர விழாவின் ஏழாம் நாளில் தேர் திருவிழா விமரிசையாக நடைபெறும்.
எனவே, பாதுகாப்பாக தேரை நிறுத்துவதற்காக, காவல் நிலையம் அருகே மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. தேர் மண்டபம் அருகே கோவிலுக்கு சொந்தமான இடத்தை சமூக விரோதிகள் சிலர், 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளதாக, கோவில் நிர்வாகத்திற்கு புகார் வந்தன.
திருத்தணி முருகன் கோவில் இணை ஆணையர் ரமணி உத்தரவின்படி, அதிகாரிகள் ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்தனர். கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சிலர் ஆக்கிரமித்து கடைகள் கட்டியிருப்பது தெரியவந்தது.
கடந்த வாரம் ஆக்கிரமிப்பு கட்டடத்தை இடித்து அகற்ற அறநிலையத்துறை அதிகாரிகள் வந்த நிலையில், ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாக அகற்றி விடுவதாக கூறினர். ஆனால் முழுதும் அகற்றவில்லை. நேற்று பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன், திருத்தணி கோவில் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினர்.