/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
/
திருத்தணியில் கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
திருத்தணியில் கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
திருத்தணியில் கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
ADDED : ஜன 23, 2025 08:04 PM
திருத்தணி:திருத்தணி பாரதியார் தெருவில் வசித்து வருபவர் தர்மராஜ், 65. இவர், வீட்டின் முன் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 9:30 மணி வரை வியாபாரம் செய்துவிட்டு கடையை பூட்டிக் கொண்டு வீட்டிற்கு துாங்க சென்றார்.
நேற்று காலை, கடையை திறக்க வந்த தர்மராஜ், கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டார். கடையின் உள்ளே சென்று பார்த்த போது, அங்கு வைத்திருந்த, 14,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.
அதே போல, திருத்தணி, பெரிய தெருவில், தமிழரசி, 55, என்பவரது, மளிகை கடையிலும் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து, 6,000 ரூபாய் திருடு போயுள்ளது.
இது குறித்து, இரண்டு கடை உரிமையாளர்கள் கொடுத்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.