/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் பற்றாக்குறை
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் பற்றாக்குறை
ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் பற்றாக்குறை
ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் பற்றாக்குறை
ADDED : நவ 21, 2024 12:34 AM

திருவாலங்காடு:மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் பற்றாக்குறை நிலவுவதால், நோயாளிகள் நீண்டநேரம் காத்திருந்து சிகிச்சை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
திருவாலங்காடில் பழைய பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. தினமும், 200க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.
இந்த மருத்துவமனையில் ஐந்து மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால், தற்போது மூன்று மருத்துவர்கள் மட்டுமே நியமிக்கப்படுள்ளனர். அதில், ஒருவர் தற்போது விடுமுறையில் இருப்பதால், இரண்டு மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.
மருத்துவர்கள் பற்றாக்குறையால், வெளிநோயாளிகள் மற்றும் கர்ப்பிணியர் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் காத்திருக்கும் அவலநிலை உள்ளது.
அதேபோல், இரவு நேரங்களில் ஒரு மருத்துவர் பணியாற்ற வேண்டும். ஆனால், மருத்துவர் இல்லாததால் அவசர சிகிச்சைக்காக வருவோர், 15 கி.மீ., தூரத்தில் உள்ள திருவள்ளூர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக தரம் உயர்த்தியும் பயனில்லாமல் உள்ள திருவாலங்காடு மருத்துவமனைக்கு, மருத்துவர்களை நியமிக்க மாவட்ட சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.