/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊரக வளர்ச்சி துறையில் பணியாளர் பற்றாக்குறை அடிப்படை வசதி நிறைவேற்றுவதில் சிக்கல்

ADDED : ஏப் 11, 2025 02:32 AM
திருவள்ளூர:திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஒன்றிய அலுவலகம் உட்பட ஊரக வளர்ச்சித்துறையில் திட்ட இயக்குனர், உதவி திட்ட இயக்குனர், பி.டி.ஓ.,க்கள், ஊராட்சி செயலர்கள் என மொத்தம் 1,485 பேர் பணிபுரிய வேண்டும்.
இதில் 1,112 பேர் மட்டும் பணிபுரிந்து வருகின்றனர். 373 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனால் மத்திய, மாநில அரசின் திட்டங்கள் மக்களுக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய அரசின் ஜல்ஜீவன் குடிநீர் திட்டம் மற்றும் 100 நாள் வேலை உறுதி திட்டத்திலும் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது.
மேலும் ஒரு ஊராட்சி செயலரே இரண்டு, மூன்று ஊராட்சிகளை கூடுதலாக கவனித்து வருவதால் வீடு, தண்ணீர் வரி போன்ற வரியினங்கள் வசூலிப்பதிலும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் ஊரக வளர்ச்சித்துறையில் காலி பணியிடங்களை நிரப்பி, பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் மற்றும் கிராமப்பகுதிகளில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.