/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காட்சி பொருளான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
/
காட்சி பொருளான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
ADDED : ஜன 08, 2024 06:18 AM

திருத்தணி: திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே தாசில்தார் அலுவகம் இயங்கி வருகிறது. இங்கு ஆதார் மையம், இ-- சேவை மையம், வட்ட வழங்கல் அலுவலகம், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அலுவலகம் மற்றும் சர்வே அலுவலகமும் உள்ளன.
இதனால் தாசில்தார் அலுவலகத்திற்கு திருத்தணி நகராட்சி உள்பட, 74 வருவாய் கிராமங்களில் இருந்து தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள் மற்றும் அரசு நலதிட்ட உதவிகள் பெறும் பயனாளிகள் ஆகியோர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் அப்போதைய தாசில்தார், மக்களுக்கு துாய்மையான குடிநீர் வழங்க வேண்டும் என குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரத்தை பொருத்தி அதன் மூலம் குடிநீரை வினியோகம் செய்து வந்தார்.
இந்நிலையில் ஒன்றரை ஆண்டுகளாக தண்ணீரை சுத்திகரிக்கும் இயந்திரம் பழுதடைந்து காட்சி பொருளாகவே உள்ளது.
மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து தண்ணீரை சுத்திகரிக்கப்படும் இயந்திரத்தை சீரமைத்து துாய்மையான குடிநீரை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.