/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அத்திப்பட்டில் சிக்னல் கோளாறு புறநகர் ரயில் சேவை பாதிப்பு
/
அத்திப்பட்டில் சிக்னல் கோளாறு புறநகர் ரயில் சேவை பாதிப்பு
அத்திப்பட்டில் சிக்னல் கோளாறு புறநகர் ரயில் சேவை பாதிப்பு
அத்திப்பட்டில் சிக்னல் கோளாறு புறநகர் ரயில் சேவை பாதிப்பு
ADDED : ஜன 26, 2025 10:04 PM
மீஞ்சூர்:கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல் இடையே ரயில் மார்க்கத்தில், 100க்கும் மேற்பட்ட விரைவு மற்றும் புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில் மார்க்கத்தில், தண்டவாளம் விரிசல், மின்ஒயர் அறுந்து விழுவது, சிக்னல் கோளாறு, ரயில் இன்ஜின் பழுது என, பல்வேறு பராமரிப்பு குறைபாடுகளால் ரயில் சேவை பாதிப்பு தொடர்கிறது.
நேற்று மாலை, அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையம் அருகே, சிக்னல் பழுதானது. இதனால் கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல் இடையே ரயில் சேவை பாதித்தது.
புறநகர் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ரயில்வே ஊழியர்கள், அங்கு சென்று, தண்டவாளங்கள் பிரியும் இடத்தில், ஏற்பட்டிருந்த பழுதை நீக்கியபின் சிக்னல் கோளாறு சீரானது.
அதையடுத்து, ஒரு மணி நேர தாமத்துடன் ரயில்கள் புறப்பட்டு சென்றன. இதனால் பயணியர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்த ரயில் மார்க்கத்தில், அடிக்கடி இதுபோன்ற பாதிப்புகள் தொடர்வதால், ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணியர் எதிர்பார்க்கின்றனர்.