/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புறநகர் ரயில்களை குறித்த நேரத்தில் இயக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்
/
புறநகர் ரயில்களை குறித்த நேரத்தில் இயக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்
புறநகர் ரயில்களை குறித்த நேரத்தில் இயக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்
புறநகர் ரயில்களை குறித்த நேரத்தில் இயக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்
ADDED : பிப் 17, 2025 11:14 PM

பொன்னேரி, கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல் ரயில் மார்க்கத்தில், தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் புறநகர் ரயில்களில் பயணிக்கின்றனர்.
இந்த மார்க்கத்தில் புறநகர் ரயில்கள், குறித்து நேரத்தில் இயக்கப்படுவதில்லை. லுாப்லைன் பயணம், சிக்னல் கோளாறு, விரைவு ரயில்களுக்காக நிலையங்களில் காத்திருப்பு என, பயணம் நேரம், அறிவிக்கப்பட்ட நேரத்தைவிட இருமடங்குகளாக இருக்கிறது.
இதனால், புறநகர் ரயில்களில் பயணிக்கும் மாணவர்கள், பணியாளர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள் பெரும் சிரமத்திற்கும், இன்னலுக்கும் ஆளாகின்றனர்.
ரயில் பயணியரின் குறைகளை, ரயில்வே நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், நேற்று, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில், கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
பொன்னேரி, அனுப்பம்பட்டு, மீஞ்சூர், நந்தியம்பாக்கம், அத்திப்பட்டு, அத்திப்பட்டு புதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் பயணியரிடம் கையெழுத்து பெறப்பட்டது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கூறியதாவது:
புறநகர் ரயில்கள் குறித்த நேரத்தில் இயக்க வேண்டும். நான்குவழி ரயில்பாதை அமைக்க வேண்டும். கூடுதல் புறநகர் ரயில்களை இயக்க வேண்டும். காலை, மாலை நேரங்களில், 12 பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில்களை இயக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் வகையில் பெட்டிகளை அமைக்க வேண்டும். வடமாநிலங்களுக்கு சென்றுவரும் விரைவு ரயில்களை, கும்மிடிப்பூண்டி அல்லது பொன்னேரியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து ரயில் நிலையங்களிலும் பூட்டி கிடக்கும் கழிப்பறைகளை பயனுக்கு கொண்டு வந்து உரிய முறையில் பராமரிக்க வேண்டும்.
ஒரு லட்சம் பயணியரிடம் கையெழுத்து பெற்று ரயில்வே அதகாரிகளை சந்தித்து வழங்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

