/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எஸ்.ஐ.ஆர்., திருத்தம்: ஓட்டு சாவடி மையங்களில் இன்று சிறப்பு முகாம்
/
எஸ்.ஐ.ஆர்., திருத்தம்: ஓட்டு சாவடி மையங்களில் இன்று சிறப்பு முகாம்
எஸ்.ஐ.ஆர்., திருத்தம்: ஓட்டு சாவடி மையங்களில் இன்று சிறப்பு முகாம்
எஸ்.ஐ.ஆர்., திருத்தம்: ஓட்டு சாவடி மையங்களில் இன்று சிறப்பு முகாம்
ADDED : நவ 15, 2025 10:12 PM
திருவள்ளூர்: வாக்காளர் சிறப்பு திருத்த விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்வதற்காக, இன்று அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வருகிறது. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வீடுதோறும் சென்று விண்ணப்ப படிவத்தை, வாக்காளர்களுக்கு வழங்கி, அவற்றை பூர்த்தி செய்து பெறப்பட்டு வருகிறது.
அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக, கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்வதற்கு, அவரவர் ஓட்டுச்சாவடி மையங்களில், இன்று காலை 9:00 - மாலை 5:00 மணி வரை, உதவி மையம் அமைக்கப்பட உள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கணக்கெடுப்பு படிவத்தை நிரப்புதல் தொடர்பாக சந்தேகம் இருந்தால், மேற்படி உதவி மையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், இந்த மையத்திலேயே பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.