/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விஷநெடியுடன் சரக்கு விற்ற சிவகங்கை வாலிபர் கைது
/
விஷநெடியுடன் சரக்கு விற்ற சிவகங்கை வாலிபர் கைது
ADDED : செப் 19, 2024 01:34 AM

திருவள்ளூர்:திருவள்ளூர், ஐவேலியகரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே, கள்ளத்தனமாக மது விற்பனை நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திருவள்ளூர் நகர காவல் உதவி ஆய்வாளர் ராக்கிகுமாரி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது, டாஸ்மாக் கடை அருகே சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த வேல்பிரபாகரன், 22, என்பதும், அனுமதியின்றி விஷநெடியுடன் கூடிய மதுபாட்டில்கள் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்து வழக்கு பதிந்த திருவள்ளூர் நகர போலீசார், வேலுபிரபாகரனை கைது செய்து, 27 குவார்ட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.