/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி அருகே அடுத்தடுத்து மூன்று கார்கள் மோதல் புதுமண தம்பதி உட்பட 6 பேர் காயம்

ADDED : பிப் 17, 2025 02:51 AM

திருத்தணி:ஆந்திர மாநிலம், திருப்பதி பகுதியைச் சேர்ந்த சுரேஷ், 27; அவரது உறவினர் மகள் சுஷ்மிதா, 23. இவர்களுக்கு நேற்று காலை திருப்பதியில் பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்தது.
பின், இரு வீட்டாரின் உறவினர்களுடன் புதுமண தம்பதியினர், திருத்தணி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, மீண்டும் திருப்பதி நோக்கி, 'ஸ்கார்பியோ' காரை புதுமாப்பிள்ளை ஓட்டிச் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி அடுத்த, தரணிவராகபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, ஓட்டுநர் சுரேஷ் கட்டுப்பாட்டை இழந்து கார், எதிர் திசையில் வந்த இரண்டு கார்களின் மீது லேசாக உரசிவிட்டு, மூன்றாவதாக வந்த காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் புதுமண தம்பதியினர் மற்றும் அவரது உறவினர்கள் 4 பேர் காயமடைந்தனர்.
அதேபோல, எதிர்திசையில் காரில் வந்த சென்னை, சோளிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த சேகர்பாசு, சபர்ணபாசு ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த 6 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.