/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தாலுகா துவங்கி ஆறு ஆண்டுகளை கடந்தும்...பயனில்லை:அடிப்படை தேவைகளுக்கு அலையும் மக்கள்
/
தாலுகா துவங்கி ஆறு ஆண்டுகளை கடந்தும்...பயனில்லை:அடிப்படை தேவைகளுக்கு அலையும் மக்கள்
தாலுகா துவங்கி ஆறு ஆண்டுகளை கடந்தும்...பயனில்லை:அடிப்படை தேவைகளுக்கு அலையும் மக்கள்
தாலுகா துவங்கி ஆறு ஆண்டுகளை கடந்தும்...பயனில்லை:அடிப்படை தேவைகளுக்கு அலையும் மக்கள்
ADDED : மே 10, 2025 02:38 AM
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை - தனி தாலுகா துவங்கி ஆறு ஆண்டுகளை கடந்தும், அடிப்படை தேவைகள் மற்றும் அரசு சேவைகளுக்காக பகுதிவாசிகள் அலையும் நிலை தொடர்கிறது. தாலுகா தலைமையிடத்தில் பேருந்து நிலையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கேள்விக்குறியாகவே உள்ளது.
பள்ளிப்பட்டு தாலுகாவில் பள்ளிப்பட்டு மற்றும்ஆர்.கே.பேட்டை ஒன்றி யங்களுக்கு உட்பட்டு 71 ஊராட்சிகள் செயல்பட்டுவந்தன. கடந்த 2019 பிப்.,18ல், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட 38 ஊராட்சிகளை கொண்டு, ஆர்.கே.பேட்டை - தனி தாலுகா உருவாக்கப்பட்டது.
தாலுகா அந்தஸ்தை பெற்றதும், ஆர்.கே.பேட்டையின் அடிப்படைதேவைகளான பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, சார் கருவூலம், தீயணைப்பு நிலையம், தொழிற்பேட்டை விஸ் தரிப்பு, அரசு கலை கல்லுாரி உள்ளிட்டவை அமையும் என, பகுதிவாசிகள் எதிர்பார்த்துகாத்திருந்தனர்.
ஆனால், தனி தாலுகாவாக பிரிக்கப்பட்டு ஆறு ஆண்டுகளான நிலையில், ஆர்.கே.பேட்டையில் எந்தவித முன்னேற்ற நடவடிக்கைகளையும் தற்போது வரை முன்னெடுக்கவில்லை. சார்கருவூலகம், அரசு பொது மருத்துவமனை, தீயணைப்பு நிலையம், நீதிமன்றம் உள்ளிட்டவற்றிற்காக, பள்ளிப்பட்டு அல்லது திருத்தணி தாலுகாவை சார்ந்தே இருக்க வேண்டிய நிலை உள்ளது.
இது தவிர்த்து, ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் செயல்படும் சார் கருவூலகம், அரசு பொது மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இந்த தாலுகாவை சேர்ந்த மாணவர்கள், உயர்கல்விக்காக திருத்தணி அல்லது சோளிங்கர் அரசு கலை கல்லுாரிகளுக்கு சென்று வருகின்றனர்.
தாலுகா தலைமையிடமான ஆர்.கே.பேட்டையில், இதுவரையில் பேருந்து நிலையம் கூட ஏற்படுத்தப்படவில்லை. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், ஆர்.கே.பேட்டையில் தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டது.
இந்த தொழிற்பேட்டையில் இதுவரை எந்தவொரு பெரிய நிறுவனமும் செயல்படுத்தப்படவில்லை. ஒற்றை இலக்கத்திலான தொழிற்சாலைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.
மேலும், நீலோத்பாலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பத்மாபுரத்தில்அரசு பணிமனை செயல்பட்டு வருகிறது. இந்த பணிமனை அமைந்துள்ள இடம் மட்டும் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்டது.
ஆனால், சோளிங்கர் பேருந்து பணிமனை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பணிமனையில்இருந்து இயக்கப்படும் பேருந்துகளும்,சோளிங்கர் பேருந்து நிலையத்தை அடிப்படையாக கொண்டே செயல்பட்டு வருகின்றன.
எனவே, ஆர்.கே. பேட்டை - தனி தாலுகா வில், அடிப்படை தேவைகள் மற்றும் அரசு சேவைகளை பெறுவதற்கு வசதியாக, தாலுகா தலைமையிடத்தில் பேருந்து நிலையம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, ஆர்.கே. பேட்டை தாலுகா வட்டாட்சியர் ராஜேஷ்குமார் கூறியதாவது:
ஆர்.கே.பேட்டை தாலுகாவில் புதிதாக நீதிமன்றம் ஏற்படுத்துவதற்கான கருத்துரு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு பொது மருத்துவமனை, பேருந்து பணிமனை, சார் கருவூலம் உள்ளிட்டவை குறித்து, துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வர்.
இவ்வாறு அவர்கூறினார்.
வேலை வாய்ப்பு இல்லை
தொழிற்கல்வி படித்த இளைஞர்கள், தனியார் நிறுவனங்களில் வேலை தேடி, ராணிப்பேட்டை மாவட்டம்அரக்கோணம் மற்றும் சோளிங்கர் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளுக்கு சென்று வருகின்றனர். ஆர்.கே.பேட்டை தொழிற் பேட்டையை மேம்படுத்தினால்,உள்ளூரில் வேலைவாய்ப்பு பெருகும்.
-- என்.தாமோதரன், அம்மையார்குப்பம்.
இ - சேவை மையம் போதுமே!
வருவாய் துறை மற்றும் தேர்தல் பிரிவுஉள்ளிட்ட சேவைகளை, இ - சேவைமையங்களிலேயே பெறலாம். தனிநபர் களும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க முடியும். மேலும், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எனவே, பொது சேவைகளை மேம்படுத்த அரசுநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- -எஸ்.மணிகண்டன், வங்கனுார்.