/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் வளர் பயிற்சி
/
கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் வளர் பயிற்சி
ADDED : ஜூலை 10, 2025 01:50 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு, சம்பளத்துடன் திறன் வளர் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
திருவள்ளூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் -சமூக பாதுகாப்பு திட்டம், வெங்கடாசலபதி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில், 54 வகையான கட்டுமான தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
திருவள்ளூர் மாவட்டத்தில், 60,488 தொழிலாளர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்து உள்ளனர்.
கட்டுமான தொழிலாளர்களுக்கு, தொழில் சார்ந்த நவீன தொழில் நுட்ப பயிற்சி அளித்து, அவர்களின் திறனை மேம்படுத்த, அந்தந்த மாவட்டத்திலேயே, மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையம் வாயிலாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
கார்பென்டர், கம்பி வளைப்பு வேலை, தச்சு வேலை, மின் பணியாளர் வேலை, பிளம்பர், வெல்டர், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட, 12 தொழில்கள் குறித்து ஏழு நாட்களுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி, 800 ரூபாய் ஊதியத்துடன் வழங்கப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில், 1,100 கட்டுமான தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பயிற்சி வழங்கப்பட உள்ளது.
பயிற்சியில் பங்கு பெறும் தொழிலாளர்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் உணவு இலவசமாகவும் வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.