/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மெதுார் - கோளூர் சாலையில் தடுப்பு இல்லாத சிறுபாலம்
/
மெதுார் - கோளூர் சாலையில் தடுப்பு இல்லாத சிறுபாலம்
மெதுார் - கோளூர் சாலையில் தடுப்பு இல்லாத சிறுபாலம்
மெதுார் - கோளூர் சாலையில் தடுப்பு இல்லாத சிறுபாலம்
ADDED : மார் 17, 2025 01:42 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த மெதுாரில் இருந்து கோளூர், அகரம் வழியாக தேவம்பட்டு செல்லும் சாலையில், மழைநீர் செல்வதற்காக பல்வேறு இடங்களில் சிறுபாலங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில், கோளூர் ஆண்டார்தோப்பு பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சிறுபாலத்தின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்படாமல் உள்ளன.
இந்த பாலத்தின் இருபுறமும், விவசாய நிலங்களுக்கான மழைநீர் செல்லும் கால்வாய் அமைந்துள்ளது. பாலத்திற்கு தடுப்புகள் இல்லாததால், வாகனங்கள் தவறி விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
எதிரெதிரே வாகனங்கள் கடக்கும்போது, இடதுபுறம் ஒதுங்கினால் கால்வாய் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, அசம்பாவிதங்களை தவிர்க்க, சிறுபாலத்தின் இருபுறமும் தடுப்புகள் மற்றும் ஒளிரும் ரிப்ளக்டர்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.