/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆந்திராவிற்கு ரேஷன் அரிசி கடத்தல்: ஐந்து பேர் கைது
/
ஆந்திராவிற்கு ரேஷன் அரிசி கடத்தல்: ஐந்து பேர் கைது
ஆந்திராவிற்கு ரேஷன் அரிசி கடத்தல்: ஐந்து பேர் கைது
ஆந்திராவிற்கு ரேஷன் அரிசி கடத்தல்: ஐந்து பேர் கைது
ADDED : மே 16, 2025 10:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டியில் இருந்து ஆந்திராவிற்கு ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவதாக, மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
நேற்று முன்தினம் இரவு, எளாவூர் சோதனைச்சாவடியில் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் சோதனையில், சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் நோக்கி அடுத்தடுத்து சென்ற மூன்று ஆட்டோக்களை மடக்கி சோதனை செய்தனர். அதிலிருந்த, 1,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த எல்லம்மாள், 44, மோகனா, 44, சென்னையை சேர்ந்த சிவா, 42, செல்வராஜ், 54 மற்றும் அந்தோணி, 45, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.