ADDED : ஜூலை 19, 2025 11:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:கடையில் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் பத்திரமாக மீட்டனர்.
திருத்தணி நகராட்சி, கடப்பா டிரங்க் சாலையில், நேற்று நண்பகல் ராஜகோபாலன் என்பவரின் கடையில், 3.5 அடி நீளமுள்ள பாம்பு நுழைய முயன்றது. இதை பார்த்த ராஜகோபாலன், பாம்பை விரட்டிய போது, பின்னால் மூடப்பட்டிருந்த ஜவுளி கடையில் புகுந்தது.
தகவல் அறிந்து வந்த திருத்தணி தீயணைப்பு வீரர்கள், அரை மணி நேரம் போராடி பாம்பை பிடித்து, திருத்தணி அருகே உள்ள வனப்பகுதியில் விட்டனர்.

