/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புதிய நகராட்சி அலுவலகம் கட்ட மண்பரிசோதனை
/
புதிய நகராட்சி அலுவலகம் கட்ட மண்பரிசோதனை
ADDED : நவ 05, 2024 10:56 PM

திருத்தணி:திருத்தணி பேருந்து நிலையம் அருகே நகராட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. கடந்த, 45 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடம் தற்போது பழுதடைந்து உள்ளது. மேலும், அலுவலகத்தில் இயங்கி வரும் பொறியியல் பிரிவு, வருவாய் பிரிவு, துப்புரவு பிரிவு மற்றும் அலுவலக ஊழியர்கள் பணியாற்றுவதற்கு போதிய இடவசதி இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும் நகராட்சியின் முக்கிய ஆவணங்கள் பாதுகாப்பாக வைப்பதற்கும் போதிய இடவசதியில்லை. இதையடுத்து நகர்மன்ற கூட்டத்தில், தற்போதுள்ள நகராட்சி அலுவலகத்தை இடித்து அகற்றி அதே இடத்தில் மூன்று அடுக்கு கொண்ட புதிய நகராட்சி அலுவலகம் கட்டுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதிய கட்டடம் கட்டுவதற்கு, 4.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேறியது. இந்நிலையில், நேற்று புதிய நகராட்சி அலுவலகம் கட்டுவதற்கு மண் பரிசோதனை செய்யும் பணி துவங்கியது.
புதிய அலுவலகம் ஒரு வருடத்திற்குள் கட்டி முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.