/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ராணுவ வீரர் கொலை வழக்கு சகோதரர் எஸ்.பி.,யிடம் புகார்
/
ராணுவ வீரர் கொலை வழக்கு சகோதரர் எஸ்.பி.,யிடம் புகார்
ராணுவ வீரர் கொலை வழக்கு சகோதரர் எஸ்.பி.,யிடம் புகார்
ராணுவ வீரர் கொலை வழக்கு சகோதரர் எஸ்.பி.,யிடம் புகார்
ADDED : மார் 21, 2025 11:54 PM
திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், முத்துக்கொண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 47; முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு சந்தியா, 33, என்ற மனைவியும், 9 வயதில் மகளும், 7 வயதில் மகனும் உள்ளனர்.
கடந்த பிப்., 3ம் தேதி விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக, போலீசார் வழக்கு பதிந்தனர். இந்நிலையில், திருவாலங்காடு பகுதியில் பதுங்கியிருந்த சென்னை ரவுடிகளான மணிகண்டன், 23, லோகேஸ்வரன், 23, மற்றும் ஸ்ரீராம், 20, ஆகிய மூவரையும், பிப்., 10ம் தேதி சென்னை போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த, அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ், 30, பிரசாந்த், 27. லோகேஷ், 38, சண்முகம், 36, ஆகியோரையும் கைது செய்தனர்.
பின், போலீசார் நடத்திய விசாரணையில், வெங்கடேசனை, மனைவி சந்தியா, அவரது அண்ணன் சண்முகம் மற்றும் கள்ளக்காதலன் தோமூர் லோகேஷ் உதவியுடன் கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றிய திருவாலங்காடு போலீசார், சந்தியா உட்பட எட்டு பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
நேற்று ராணுவ வீரரின் சகோதரர் வி.முருகன், 40, மற்றும் அவரது உறவினர்கள், மாவட்ட எஸ்.பி.,யிடம் அளித்த மனு விபரம்:
எனது அண்ணன் வெங்கடேசனை, கடந்த 3ம் தேதி வெட்டி கொலை செய்துவிட்டனர். இந்த வழக்கில் எட்டு பேரை திருவாலங்காடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
எனது அண்ணன் வெங்கடேசனின் வீட்டிலிருந்த 45 சவரன் நகை, வீடு கட்டுவதற்காக வைத்திருந்த 50 லட்சம் ரூபாய் மற்றும் நிலப்பத்திரம் ஆகியவற்றை ரமேஷ்காந்தின் சகோதரர் நேதாஜி மற்றும் சந்தியாவின் உறவினர் எடுத்துச் சென்றதாக, பகுதிவாசிகள் அளித்த தகவலின்படி, திருவாலங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.
ஒரு மாதத்திற்கு மேலாகியும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், வெங்கடேசனின் கொலைக்கு, நேதாஜியின் அண்ணன் ரமேஷ்காந்த் என்பவர் முக்கிய காரணம் என, லோகேஷ் போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
எனவே, மாவட்ட எஸ்.பி., ரமேஷ்காந்த் மற்றும் நேதாஜி ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து, பணம், நகைகளை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்ற எஸ்.பி., 'விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' எனக் கூறினார்.