/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ராமதண்டலத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் 'அம்போ'
/
ராமதண்டலத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் 'அம்போ'
ராமதண்டலத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் 'அம்போ'
ராமதண்டலத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் 'அம்போ'
ADDED : மார் 16, 2025 02:15 AM

திருவள்ளூர்:பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமதண்,டலம் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். திடக்கழிவு மேலாண்மை செய்யும் திட்டம், 2020-21ல் துவக்கப்பட்டு உள்ளது. இந்த ஊராட்சியில் சேகரமாகும் குப்பையை தள்ளுவண்டியில் எடுத்து வந்து சேகரிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக, குப்பையை தரம் பிரிக்க, மட்கும் மற்றும் மட்காத குப்பை கழிவை கொட்டி சேகரிக்க குழிகள் தோண்டப்பட்டு உள்ளன. மேலும், மட்கும் குப்பையை உரமாக மாற்ற அருகிலேயே குடில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்பாட்டிற்கு வராமல் முடங்கி விட்டது. இதனால், ஊராட்சியில் சேகரமாகும் குப்பை, தெருக்களில் தேங்கியுள்ளது. அவற்றை, கிராமவாசிகள் தீ வைத்து எரிப்பதால், இங்கு சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.