/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'சோமசுந்தரம்' கோப்பை கிரிக்கெட் போட்டி அசோக் நகர் ஜவகர் வித்யாலயா அபாரம்
/
'சோமசுந்தரம்' கோப்பை கிரிக்கெட் போட்டி அசோக் நகர் ஜவகர் வித்யாலயா அபாரம்
'சோமசுந்தரம்' கோப்பை கிரிக்கெட் போட்டி அசோக் நகர் ஜவகர் வித்யாலயா அபாரம்
'சோமசுந்தரம்' கோப்பை கிரிக்கெட் போட்டி அசோக் நகர் ஜவகர் வித்யாலயா அபாரம்
ADDED : பிப் 14, 2024 11:41 PM
சென்னை:தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், சோமசுந்தரம் கோப்பைக்கான யு - 14 கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன. இதில், சென்னையில் இருந்து பல்வேறு அணிகள் பங்கேற்றுள்ளன.
இதில், அசோக் நகர் ஜவகர் வித்யாலயா பள்ளி மற்றும் வெங்கம்பாக்கம், எப்.ஐ.ஐ.டி.ஜெ.இ.இ., குளோபல் பள்ளி அணிகள் மோதின.
இதில், முதலில் பேட் செய்த அசோக் நகர் ஜவகர் வித்யாலயா பள்ளி துவக்க வீரர்களாக சாகித் சரண் மற்றும் லோகித் களமிறங்கினர். இவர்கள் நல்ல துவக்கம் தந்தனர். இந்த நிலையில் 25 ரன்களில் லோகித் ஆட்டமிழந்தார். அதன்பின், சாகித் சரனுடன் அபினேஷ் குமார் கைகோர்த்தார்.
இந்த இணையின் அதிரடி ஆட்டத்தால், ஸகோர் மளமளவென உயர்ந்தது. நிர்ணயிக்கப்பட்ட 30 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் குவித்தது.
கடினமான இலக்கை நோக்கி, அடுத்த களமிறங்கிய வெங்கம்பாக்கம் அணி, எதிரணி பந்துவீச்சாளர்களின் தாக்குதலில் நிலைகுலைந்து போயினர். முடிவில், 30 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 231 ரன்கள் வித்தியாசத்தில், அந்த அணி தோல்வியை தழுவியது.
அதேபோல, சாந்தோம் பள்ளி அணி மற்றும் ஓ.எம்.ஆர்.ரில் உள்ள பி.எஸ்.பி.பி., பள்ளி அணிகள் எதிர்கொண்டன.
முதலில் பேட் செய்த, பி.எஸ்.பி.பி., அணி, 22 ஓவர்களில் ஆல் அவுட்டாகி 62 ரன்களை அடித்தது. எளிதான இலக்கை நோக்கி அடுத்து பேட் செய்த சாந்தோம் பள்ளி அணி, 16.1 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில், அரும்பாக்கம் கோல பெருமாள் செட்டி மற்றும் கே.கே., நகர் பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி அணிகள் மோதின.
இதில், முதலில் ஆடிய கோல பெருமாள் அணி, 26.5 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 71 ரன்களில் ஆட்டமிழந்தது. அடுத்து களமிறங்கிய பத்ம சேஷாத்ரி அணி, 9.3 ஓவர்களில் 4 விக்கெட் மட்டும் இழந்து, 75 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
மற்ற ஆட்டங்களில், கெருகம்பாக்கம் பி.எஸ்.பி.பி., பள்ளி, 9 விக்கெட் வித்தியாசத்தில் செயின்ட் பீட்ஸ் அகாடமியையும், அபோட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.

