/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தென்சென்னை பால் பேட்மின்டன் அசோக் நகர் அரசு பள்ளி வெற்றி
/
தென்சென்னை பால் பேட்மின்டன் அசோக் நகர் அரசு பள்ளி வெற்றி
தென்சென்னை பால் பேட்மின்டன் அசோக் நகர் அரசு பள்ளி வெற்றி
தென்சென்னை பால் பேட்மின்டன் அசோக் நகர் அரசு பள்ளி வெற்றி
ADDED : நவ 19, 2024 06:46 AM

சென்னை; தென் சென்னை வருவாய் மாவட்ட அளவிலான பால் பேட்மின்டன் போட்டியில், நேற்றைய ஆட்டத்தில் அசோக் நகர் அரசு பள்ளி வெற்றி பெற்றது.
அரசின் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், தென் சென்னை வருவாய் மாவட்ட அளவில், மாணவியருக்கான பால் பேட்மின்டன் போட்டிகள், மேற்கு மாம்பலத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா ஹிந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், நேற்று துவங்கியது.
அதில், 14, 17, 19 வயதுக்கு உட்பட மூன்று பிரிவிலும், தலா 10 பள்ளி அணிகள் எதிர்கொண்டன. நேற்று காலை நடந்த, 19 வயதினருக்கான, 'நாக் அவுட்' போட்டி ஒன்றில், அசோக் நகர் அரசு பள்ளி மற்றும் ஜெயகோபால் கரோடியா பள்ளி அணிகள் மோதின. அதில், 35 - 28, 35 - 28 என்ற கணக்கில், அசோக் நகர் அரசு பள்ளி வெற்றி பெற்றது.
அதேபோல், 17 வயதினருக்கான ஆட்டத்தில், ஹோலி ஏஞ்சல் பள்ளி, 35 - 32, 35 - 33 என்ற கணக்கில், லேடி சிவசாமி பள்ளியை தோற்கடித்தது. போட்டிகள் தொடர்கின்றன.