/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் ஆடிக்கிருத்திகை விழா சிறப்பு பஸ், ரயில் இயக்க அறிவுறுத்தல்
/
திருத்தணியில் ஆடிக்கிருத்திகை விழா சிறப்பு பஸ், ரயில் இயக்க அறிவுறுத்தல்
திருத்தணியில் ஆடிக்கிருத்திகை விழா சிறப்பு பஸ், ரயில் இயக்க அறிவுறுத்தல்
திருத்தணியில் ஆடிக்கிருத்திகை விழா சிறப்பு பஸ், ரயில் இயக்க அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 27, 2025 12:19 AM

திருத்தணி:முருகன் கோவிலில் அடுத்த மாதம் நடைபெறும் ஆடிக்கிருத்திகை விழாவிற்கு, பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்து மற்றும் மின்சார ரயில்கள் இயக்க வேண்டும் என, திருத்தணியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், கலெக்டர் பிரதாப் அறிவுறுத்தினார்.
திருத்தணி முருகன் கோவிலில், அடுத்த மாதம் 14 - 18ம் தேதி வரை ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா நடக்கிறது. இவ்விழாவிற்கு தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல லட்சம் பக்தர்கள், காவடிகளுடன் வந்து முருகபெருமானை தரிசனம் செய்வர்.
நேற்று முருகன் மலைக்கோவில் காவடி மண்டபத்தில், ஆடிக்கிருத்திகை விழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து, கலெக்டர் பிரதாப் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், கலெக்டர் பேசியதாவது:
ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி, பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் சிறப்பாக செய்ய வேண்டும்.
திருத்தணியில் புதிதாக திறக்கப்பட்ட பைபாஸ் சாலை மற்றும் ரயில்வே மேம்பாலம் ஆகிய பகுதிகளில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும். பக்தர்கள் வசதிக்காக, 700 சிறப்பு பேருந்துகள், சென்னை சென்ட்ரல் மற்றும் ரேணிகுண்டா ஆகிய மார்க்கத்தில் இருந்து, ஐந்து சிறப்பு மின்சார ரயில்களை இயக்க வேண்டும்.
சேதமடைந்த சாலைகளை, 15 நாட்களுக்குள் சீரமைக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கூடுதல் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.