/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் சிறப்பு முகாம்
/
தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் சிறப்பு முகாம்
ADDED : அக் 09, 2024 11:11 PM
திருவள்ளூர்:திருவள்ளூர், பொன்னேரி தொழிலாளர் உதவி ஆணையர் செல்வராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் நல வாரியத்தில், பொருட்கள் மற்றும் துரித உணவு வினியோகம் செய்யும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்து கொள்ள சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் வளாகத்தில் இயங்கி வரும், தொழிலாளர் நல உதவி ஆணையர் அலுவலகத்திலும்; பென்னோரி, தடப்பெரும்பாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் தொழிலாளர் நல உதவி ஆணையர் அலுவலகத்திலும், வரும், 15, 22 மற்றும் 29 ஆகிய நாட்களில் காலை 10:00-12:00 மணி வரை நடைபெறும். தொழிலாளர் வாரியத்தில் இணைந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.