ADDED : ஜூன் 28, 2025 10:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு, சிறப்பு குறைதீர் முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரதாப் தலைமையில் நடந்த முகாமில், 345 பேர் பங்கேற்றனர்.
முகாமில், பொறியியல் பாடப் பிரிவில் 12, கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவில் 13, தொழில்நுட்பம் சார்ந்த பாடப் பிரிவு 19, கிளை மருத்துவம் 10 என, மொத்தம் 54 பேர், உயர் கல்வி தொடர உடனடி சேர்க்கை நடைபெற்றது.
மேலும், எட்டு குழந்தை தொழிலாளர் கண்டறியப்பட்டு, அவர்கள் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் சேர்க்கப்பட்டனர். மேலும், இரு மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு சார்ந்த புத்தகம் வழங்கப்பட்டது. உயர்கல்வி தொடர 12 மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ் வழங்கப்பட்டது.