/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் வரும் 24ம் தேதி திருநங்கையர் சிறப்பு முகாம்
/
திருவள்ளூரில் வரும் 24ம் தேதி திருநங்கையர் சிறப்பு முகாம்
திருவள்ளூரில் வரும் 24ம் தேதி திருநங்கையர் சிறப்பு முகாம்
திருவள்ளூரில் வரும் 24ம் தேதி திருநங்கையர் சிறப்பு முகாம்
ADDED : ஜூன் 16, 2025 11:29 PM
திருவள்ளூர், திருநங்கையருக்கு நல உதவி வழங்குவதற்காக, திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், வரும் 24ம் தேதி சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருநங்கையருக்கு முழுமையான சமூக பாதுகாப்பையும், சமூக அங்கீகாரத்தையும் அளிக்கும் வகையில், தமிழக அரசு 2008ல் திருநங்கையர் நல வாரியத்தை அமைத்தது.
திருநங்கையருக்கு அடையாள அட்டை, ரேஷன் கார்டு, சுயதொழில் துவங்க பயிற்சியுடன் கூடிய மானிய தொகை, ஓய்வூதியம், உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது.
மேலும், தமிழக அரசு உத்தரவுப்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் திருநங்கையர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர , வரும் 24ம் தேதி காலை 10:00 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
முகாமில், அடையாள அட்டை, ஆதார், வாக்காளர் அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டம் வழங்கப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து திருநங்கையர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பங்கேற்று பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.