/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
/
புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
ADDED : செப் 22, 2024 01:55 AM

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முதல் புரட்டாசி சனிக்கிழமை ஒட்டி, பெருமாள் கோவில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் வீரராகவர் பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமை ஒட்டி அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை வழிபட்டனர். ஏற்பாடுகளை கோவில் கவுர ஏஜென்ட் ஸ்ரீ ரங்கநாதன் மற்றும் கோயில் அலுவலர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.
திருவள்ளூர் பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள், திருமழிசை ஜெகந்நாத பெருமாள், ஆகிய கோவில்கள் அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது.
ஊத்துக்கோட்டை பிராமணத் தெரு அழகிய சுந்தர வரதராஜ பெருமாள் கோவில், காலை மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
உற்சவர் வரதராஜர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலித்தார்.
திருத்தணி விஜயராகவ பெருமாள் கோவிலில், நேற்று, காலை, 7:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
திருத்தணி அடுத்த, நெமிலி கிராமத்தில் உள்ள வைகுண்ட பெருமாள் கோவிலில், நேற்று, காலை, 8:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 8:00 மணிக்கு, உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கிராம வீதிகளில் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.
திருத்தணி அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி, பொன்பாடி கொல்லகுப்பம் வெங்கடசேஸ்வர சுவாமி ஆகிய கோவில்களில் சிறப்பு அபிேஷகம் மற்றும் பூஜைகள் நடந்தன.
சோளிங்கர் பக்தோசித பெருமாள் கோவிலில் புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் நவராத்திரி உற்சவம், திருக்கல்யாண உற்சவம், டோலா உற்சவம, கடை வெள்ளி உள்ளிட்ட உற்சவங்கள் நடைபெறும்.
இந்த உற்சவ நாட்களில் பெரிய மலை யோக நரசிம்மர் கோவில் இருந்து அமிர்தவல்லி தாயார், உற்சவமூர்த்தி பக்தோசித பெருமாள் அருள்பாலிக்கும் ஊர்கோவிலில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.
அதே போல புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையான நேற்று உற்சவத்தில் கலந்து கொள்ள அமிர்தவல்லி தாயார், மங்கள வாத்தியங்கள் முழங்க பெரிய மாலை கோவிலில் இருந்து, ஊர் கோவிலுக்கு கிளி கூண்டு வாகனத்தில் எழுந்தருளினார்.
நான்கு மாடவீதிகளில் உலா வந்து அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
-- -நமது நிருபர்-- குழு-