/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சித்திரை மாத பவுர்ணமி கோவில்களில் சிறப்பு பூஜை
/
சித்திரை மாத பவுர்ணமி கோவில்களில் சிறப்பு பூஜை
ADDED : மே 12, 2025 11:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி, திருத்தணி நகராட்சியில் ஜோதிசாமி தெருவில் உள்ள பஜனை கோவில், நெமிலி வைகுண்ட பெருமாள் கோவில், நல்லாட்டூர் வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில் உட்பட திருத்தணி தாலுகாவில் உள்ள அனைத்து கோவில்களில் சித்திரை மாத பவுர்ணமியை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.
மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.
திருத்தணி அக்கைய்யாநாயுடு சாலையில் உள்ள தணிகாசலம்மன் கோவிலில், மூலவருக்கு மஞ்சள் தண்ணீர் மற்றும் பாலாபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தார்.