/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருமழிசை பேரூராட்சியில் சிறப்பு வார்டு கூட்டம்
/
திருமழிசை பேரூராட்சியில் சிறப்பு வார்டு கூட்டம்
ADDED : அக் 30, 2025 11:38 PM
திருமழிசை:  திருமழிசை பேரூராட்சியில் சிறப்பு வார்டு சபா கூட்டம் நடந்தது.
திருமழிசை பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும், மூன்று நாட்களுக்கு சிறப்பு பேரூராட்சி வார்டு சபா சிறப்பு கூட்டம் நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திருமழிசை பேரூராட்சியில் நேற்று முன்தினம் 1,2,7,9,15 ஆகிய வார்டுகளில் பேரூராட்சி தலைவர் மகாதேவன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில், பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ் தலைமையில் வார்டு சபா கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பகுதி மக்கள் குடிநீர், சாலை, கால்வாய் போன்ற கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
இதில் 2வது வார்டு பகுதியில் பூந்தமல்லி எம்.எல்.ஏ.,கிருஷ்ணசாமி பங்கேற்று பகுதி மக்களிடம் மனுக்களை பெற்றார். பெறப்பட்ட 22 கோரிக்கை மனுக்களும் முதல்வரின் முகவரி இணையளத்தில் பதிவேற்றம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென, பேரூ ராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

