/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாணவர்களுக்கு 13ல் பேச்சு போட்டி
/
மாணவர்களுக்கு 13ல் பேச்சு போட்டி
ADDED : பிப் 08, 2025 08:56 PM
திருவள்ளூர்:தமிழ் வளர்ச்சி துறை சார்பில், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கு, 13ல் பேச்சு போட்டி நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்களைப் பற்றி இளம் தலைமுறையினர் அறிந்து கொள்வதற்காக, தமிழ் இலக்கியக் கருத்தரங்கம், வரும் 21ம் தேதி, திருப்பாச்சூர் திருமுருகன் பெண்கள் கல்லுாரியில் நடக்கிறது.
இதை சிறப்பிக்கும் வகையில், 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வகுப்பு வரையிலான பள்ளி மாணவ - மாணவியருக்கு திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், வரும் 13ம் தேதி, காலை 9:30 மணியளவில் பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது.
அன்று, மதியம் 2:30 மணிக்கு கல்லுாரி, மாணவ - மாணவியருக்கும் பேச்சுப் போட்டி நடைபெறும்.
போட்டியில் வெற்றி பெறும் முதல் மூவருக்கு முறை, 5,000, 3,000 மற்றும் 2,000 ரூபாய் பரிசு வழங்கப்படும். திருவள்ளூர் மற்றும் பொன்னேரி கல்வி மாவட்டங்களில் இருந்து தலா, 20 பேரை தேர்வு செய்து, போட்டியில் பங்கேற்க செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

