ADDED : டிச 28, 2024 01:59 AM

பள்ளிப்பட்டு:பருவ மழை பெய்துவரும் நிலையில், ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில் அனைத்து ஏரி, குளங்களும் நிரம்பியுள்ளன.
ஆறுகள், ஓடைகளில் வெள்ளம் பாய்ந்து வருகிறது. இதனால், வயல்வெளியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தோட்டப்பயிராக கீரை மற்றும் காய்கறிகளை பயிரிட்டுள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கீரை தோட்டங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால், கீரை அழுகி நாசம் ஆகியுள்ளது.
சந்தைக்கு கீரை வரத்து பெருமளவில் குறைந்துவிட்டது.
ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, அத்திமாஞ்சேரிபேட்டை வார சந்தைகளுக்கு வழக்கமாக, 500 கட்டுகள் வரை கீரை விற்பனைக்காக கொண்டு வரப்படுவது வழக்கம். கடந்த சில வாரங்களாக, 50க்கும் குறைவான கீரை கட்டுகளே விற்பனைக்கு வருகிறது.
க்ஷஒரு கட்டு கீரை ரூ.10க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 20 முதல் 30 ரூபாய் வரை ஒரு கட்டு கீரை விற்கப்படுகிறது.

